திமுக இளைஞர் அணி சார்பில் 'என் உயிரினும் மேலான" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது
Virudhunagar King 24x7 |24 Aug 2024 3:08 PM GMT
திமுக இளைஞர் அணி சார்பில் 'என் உயிரினும் மேலான" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தான் எதிர்காலத்தில் தமிழகம் செல்ல வேண்டும் அதற்கு இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் இளைஞர்கள் திமுக இயக்கத்துடன் இருக்க வேண்டும் என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் விருதுநகரில் பேச்சு* முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் 100 இளம் பேச்சயார்களைத் தேர்வு செய்ய திமுக இளைஞர் அணி சார்பில் 'என் உயிரினும் மேலான" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டு தமிழக முழுவதும் நடந்து வரும் நிலையில் இன்று விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் விருதுநகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்கு வருவாய் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் , நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தனர். நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில் சென்னையில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் சென்னை வந்த பொழுது அவரை அழைத்துச் சென்று சென்னையில் உள்ள கலைஞரின் நினைவிடம் மற்றும் அருங்காட்சியத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சுற்றி காட்டியதாகவும் அதை பார்த்த மத்திய அமைச்சர் இந்தியாவில் எந்த ஒரு தலைவருக்கும் இத்தகைய சிறப்பு எந்த ஒரு காலத்திலும் அமையப் பெறவில்லை என மத்திய அமைச்சர் தமிழக முதல்வரிடம் கூறியதாகவும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார் அதைத்தொடர்ந்து பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசுகையில் தமிழகத்தை எதிர்காலத்தில் எப்படி கொண்டு செல்ல வேண்டும் அதில் இளைஞர்களின் பணி என்ன என்பதை இளைஞர்கள் புரிந்து அறிந்து பேசுவதற்காக தான் இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் கொண்டு வந்திருப்பதாகவும், தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தான் எதிர்காலத்தில் தமிழகம் செல்ல வேண்டும் அதற்கு இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் இளைஞர்கள் திமுக இயக்கத்துடன் இருக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் தற்போது பல அரசியல் கட்சி தலைவர்கள் வருவதாகவும் நடக்க முடியாததெல்லாம் பேசுவார்கள் அதை அனைத்தையும் நம்பி இளைஞர்கள் சமுதாயம் ஏமாறாமல் இருக்க வேண்டும் அவர்கள் நடக்காததெல்லாம் பேசுவதற்கு காரணம் அவர்கள் எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரப்போவதில்லை பொறுப்புக்கு வந்து விட்டால் சொல்வதை செய்ய வேண்டும் அதன் காரணமாகவே திமுக பொறுப்புக்கு வரும் கட்சி காரணமாகவே செய்ய முடிந்ததை மட்டுமே கூறுவதாகவும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்
Next Story