கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை காந்திய சிந்தனை மையம் சார்பாக வெற்றி,பணம்,சந்தோசம் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு
Palani King 24x7 |24 Aug 2024 4:09 PM GMT
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகளுக்கு விழிப்புணர்வு
. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்பட்டி பகுதியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது, இந்த பல்கலைக்கழகத்தில் வெற்றி,பணம் மற்றும் சந்தோஷம் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,இதனை தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது, இந்நிகழ்வில் முக்கிய விருந்தினராக ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் கலந்து கொண்டு உரையாற்றினர்,இதில் பணத்தின் முக்கியதுவம் குறித்தும் வெற்றிக்கும், வாழ்க்கைக்கும் சந்தோஷத்திற்கும் எவ்வாறு பயன்படுகிறது, அதேவேளையில் உறுதுணையாய் இருக்கும் பணத்தை சரியாக கையாளா விட்டால் மக்கள் மேற்கொள்ளும் பிரச்சினைகளையும், மகிழ்ச்சியற்ற வாழ்க்கையையும், தோல்வியின் பயத்தையும் தனது தொழில் அனுபவம் மற்றும் வாழ்க்கை அனுபவம் மூலம் தெளிவாக புரியும் வண்ணம் மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்,மேலும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலா உரையாற்றும் போது வாழ்க்கையில் பணத்தை விட மகிழ்ச்சியே முக்கியமானது என மாணவர்களிடையே கூறினார்,மேலும் பணத்தை விட வெற்றி மற்றும் சந்தோஷம் வாழ்க்கையில் நீண்ட காலம் வாழ்வதற்கு வழிவகுக்கும் என தெரிவித்தார், இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story