கொடைக்கானலில் முக்கிய நகர்ப்பகுதிகளில் போதை காளான் விற்பனை செய்தாலோ,அதனை வாங்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் ராட்சத பதாகைகளை வைத்து விழிப்புணர்வு
Palani King 24x7 |24 Aug 2024 4:16 PM GMT
போதை காளான் விற்பனை செய்தாலோ,அதனை வாங்கினாலோ கடும் நடவடிக்கை-காவல் துறை எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக போதை காளான் விற்பனையானது அதிகரித்து காணப்படுகிறது, மேலும் யூடியூப் மூலம் போதை காளான் சாப்பிடுவது போல் வீடியோ பதிவேற்றம் செய்வதால் கேரளா,ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் இந்த போதை காளானுக்குகாக மலைக்கிராமங்களுக்கு படையெடுக்கின்றனர்,இருப்பினும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கைது நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் போதை காளான் பயன்பாட்டை தவிர்க்க முதற்கட்டமாக கொடைக்கானலில் முக்கிய நகர் பகுதி மற்றும் அதிக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் நிறைந்து காணப்படும் பேருந்து நிலையம், 7 ரோடு சந்திப்பு, கலையரங்கம்,ஏரிச்சாலை மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் போதை காளான் விற்பனை செய்தாலோ, போதை காளனை வாங்கினாலோ NDPS வழக்கின் கீழ் பதிவு செய்யப்படும் பட்சத்தில் 10 வருடம் கடுமையான தண்டனையும்,10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக ராட்சத பதாகைகள் மற்றும் சிறிய பதாகைகள் வைக்கப்பட்டு எச்சரிக்கை விழிப்புணர்வை காவல் துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும் இந்த எச்சரிக்கை பதாகைகளில் தமிழ்,ஆங்கிலம்,மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அனைத்து சுற்றுலாப்பயணிகளுக்கும் எளிதில் புரியும் வண்ணமாக வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Next Story