குடற்புழு நீக்க உறுதி மொழி

குடற்புழு நீக்க உறுதி மொழி
குடற்புழு நீக்க உறுதி மொழி
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டுக் கழகமும் (Women Empowerment Cell), உள் இணக்கக் குழு(Internal Complaint Committee) மற்றும் புது புளியம்பட்டி சுகாதார நிலையம் இணைந்து குடற்புழு நீக்க உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வின் வரவேற்பு உரையினை மகளிர் மேம்பாட்டுக் கழக ஒருங்கிணைப்பாளரும்கணிதத் துறைத் தலைவருமாகிய முனைவர் சி.நளினி வழங்கினார்,இக்கல்லூரியின் செயலரும் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையருமாகிய மு.இரமணிகாந்தன் தலைமை வகித்தார்.தலைமை உரையினைக் கல்லூரி முதல்வர் முனைவர்.கி. வெங்கடாசலம் அவர்கள் வழங்கினார், குடற்புழு நீக்க உறுதி மொழியை கிராம சுகாதார செவிலியர் Mசுமதி உறுதி மொழியை முன்மொழிந்தனர். மேலும் சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரையினை உள் இணக்கக் குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறை தலைவருமாகிய முனைவர் மா. வசந்தகுமாரி அவர்கள் வழங்கினார் மற்றும் நன்றியுரையினை மகளிர் மேம்பாட்டுக் கழக துணை ஒருங்கிணைப்பாளரும் கணினிப் பயன்பாட்டில் துறை தலைவருமாகிய முனைவர் செ.பிரேமா அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் மாணவ/ மாணவியர்கள் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story