மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
Thoothukudi King 24x7 |25 Aug 2024 3:58 AM GMT
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயல்வீரா்கள் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை வெளியிட்டார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில், மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக கழக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக வடக்கு மாவட்டச் செயலாளா் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக தலைவா் தளபதி மு.க.ஸ்டாலின் அவா்களின் வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக கழக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கீழக்கண்ட தேதிகளில் அறிவிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் இந்த செயல்வீரா்கள் கூட்டங்களை சம்பந்தபட்ட மாநகர, நகர, ஒன்றிய பகுதி கழகச் செயலாளா்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து நடத்திடவும் சம்பந்தபட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், வார்டு மற்றும் கிளைக் கழகச் செயலாளா்கள், பிரதிநிதிகள் கழக தோழா்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்.
Next Story