பாப்பக்காபட்டியில் பாரம்பரிய நடனத்துடன் எருது மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது.
Karur King 24x7 |25 Aug 2024 4:38 AM GMT
பாப்பக்காபட்டியில் பாரம்பரிய நடனத்துடன் எருது மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது.
பாப்பக்காபட்டியில் பாரம்பரிய நடனத்துடன் எருது மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பாப்பக்காபட்டியில் 16 மந்தை சார்பில் எருது மாலை தாண்டும் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில், தாசிரிபொம்மநாயக்கன் மந்தை, கசாப்பு பாளையப்பட்டு மந்தை, கருத்தி நாயக்கர் மந்தை, காட்டுநாயக்கர் மந்தை, வீரப்பூர்அரண்மனை மந்தை, உள்ளிட்ட 16 மந்தையைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து நாயக்கர் சமூகத்தினர் வேன் மற்றும் லாரிகளில் வீட்டில் வளர்த்து வரும் சாமி மாடுகளை, மகா மாரியம்மன் கோவில் திடலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் கோவில் முன்பு மேளதாளங்கள் முழங்க சந்தனம் கொடுத்து விழா குழுவினர் அவர்களை வரவேற்றனர். பின்னர் எருது மாடு மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான எருது மாடுகள் கலந்து கொண்டன. சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எல்லையில் இருந்து, எருது மாடுகளை இளைஞர்கள் விரட்டி வந்தனர். முதலில் வந்த எருதுக்கு எலுமிச்சை பழம் மற்றும் சந்தனம் வழங்கப்பட்டது. பின்னர் உறுமி மேளம் முழங்க ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பாரம்பரிய தேவராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story