வக்பு வாரிய சொத்துக்கள் இஸ்லாமியர்கள் தானமாக கொடுத்தது

X
திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு செயற்குழு கூட்டம் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஆரிப் முகமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் துறை மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதை அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: வலுவான சிறுபான்மை பிரிவை கட்டமைப்பதற்காக காங்., சார்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக 10 ஆண்டுகளாக நடந்து வரும் பா.ஜ.,ஆட்சியை எதிர்த்து கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. வக்பு வாரிய சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மை மக்களுக்காக எதிராக நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளை கண்டித்து பா.ஜ., அரசை தொடர்ந்து எதிர்க்கிறோம். வக்பு வாரிய சொத்துக்கள் இஸ்லாமியர்கள் தானமாக கொடுத்தது. அதை அபகரிக்க திட்டம் போடுகின்றனர். இந்தியாவிலேயே சிறுபான்மையின மக்களை ஆதரிக்கும் இயக்கம் காங்., மட்டும்தான் என்றார்.
Next Story

