புதிய நூலகம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!
Thoothukudi King 24x7 |25 Aug 2024 5:17 AM GMT
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய நூலகம் விரைவில் செயல்பட துவங்கும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய நூலகம் விரைவில் செயல்பட துவங்கும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விக்கும் உயர் வேலை வாய்ப்புகளுக்கு செல்வதற்கு ஏற்ற விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள். தூத்துக்குடி மாநகரில் வ.உ.சி கல்லூரி முன்புறம் படிப்பகமும், மாவட்ட மைய நூலகமானது டுவிபுரம் பகுதியிலும், மேலூர், சிதம்பரநகர், பொன்சுப்பையா நகர் ஆகிய பகுதிகளில் முழு நேர நூலகமாகவும், மீளவிட்டான், சங்கரப்பேரி, துறைமுகம், கேம்ப்-2, சுந்தர்நகர், தேவகி நகர் கிளை நூலகங்களாகவும், ரஹ்மத்நகர், முத்தம்மாள் காலணி ஆகிய பகுதிகளில் ஊர்ப்புற நூலகங்களாகவும் செயல்பட்டு வருகின்றது. இதில் மேலூர் பகுதியில் அமைந்திருந்த நூலகமானது மாநகர மக்களின் கோரிக்கையிணை அடுத்து பழைய மாநகராட்சி (கிழக்கு மண்டலம்) அலுவலகத்தில் செயல்படுகின்றது. மேலும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் ஒரு புதிய நூலகமானது வரும் நாட்களில் இருந்து செயல்பட இருக்கின்றது. ஆகவே மாநகர மக்களும் மாணவச் செல்வங்களும் தங்கள் பகுதிகளுக்கு அருகில் உள்ள நூலகங்களுக்கும் படிப்பகத்திற்கும் சென்று பயன்படுத்துமாறு மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டார்.
Next Story