திருப்பத்தூர் நகர் பகுதியில் கழிவுநீர் ஏரி போல் தேங்கி கிடக்கும் அவல நிலை!
Tirupathur King 24x7 |25 Aug 2024 7:16 AM GMT
திருப்பத்தூர் நகர் பகுதியில் கழிவுநீர் ஏரி போல் தேங்கி கிடக்கும் அவல நிலை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சந்தன மாநகரமா! சாக்கடை நகரமா! பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால்பொதுமக்கள் அவதி! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி 3 வது வார்டு சிவராஜ் பேட்டை புதிய காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஐந்து வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தாமல் இருக்கும் நகராட்சி நிர்வாகம். இதனால் பாதாள சாக்கடையில் லிருந்து கால்வாய் வழியாக தினந்தோறும் கழிவுநீர் வெளியேறி வருகிறது இது குறித்து அப்பகுதி மக்கள் நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டு நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் மெத்தனப்போக்காக செயல்படும் நகராட்சி நிர்வாகம் இருப்பதால் மிகவும் வேதனை அளிக்கிறது என கூறுகின்றனர். இந்த வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினந்தோறும் சென்று வருகின்றனர் இதில் பள்ளி மாணவர்கள் முகம் சுளிக்கும் வகையில் மூக்கின் மீது கை வைத்து செல்கின்றனர் எனவே பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story