தாளவாடி அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் உள்ள பழமையான மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். நெடுஞ்சாலைத்துறையினர் விரைவாக மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story