பரமத்தி வேலூரில் நல்லிரவில் ஏற்பட்ட தீ விபத்து.

பரமத்தி வேலூரில் நல்லிரவில் ஏற்பட்ட தீ விபத்து.
பரமத்தி வேலூரில் நல்லிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் புத்தகடை முற்றிலும் எரிந்து நாசம். போலீசார் விசாரணை.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் திருவள்ளுவர் சாலையில் இயங்கி வந்த சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பிரபலமான அம்பிகா புக் சென்டரில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான புத்தகங்கள்,   நோட்டுகள், இயந்திரங்கள், பேனா, பென்சில், கல்வி உபகரணங்கள் மற்றும் பிரின்டிங் பைண்டிங் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.  தகவல் அறிந்து விரைந்து  வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் ஐந்து பேர் கொண்ட குழுவினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால் தீயை கட்டுபடுத்த முடியாததால்  கரூர் மாவட்டம்  புகழூர் காகித (TNPL) ககு சொந்தமான தீயணைப்பு வாகனம், மற்றும்  நாமக்கல்  தீயணைப்பு நிலையத்திலிருந்தும்  இரண்டு தீயணைப்பு வாகனங்கள்  விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக  மூன்று தீயணைப்பு வாகனங்கள் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி  தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் இயந்திரங்கள், புக் நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில், கல்வி உபகரணங்கள் முழுமையாக  தீயில் எரிந்து  நாசமானது. சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், வழக்கம்போல் கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி இரவு நேரம் 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு  வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பின்னர் இந்த தீபத்து நிகழ்ந்துள்ளது.  இந்த தீ விபத்து மின் கசிவு  காரணமா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story