ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கான விழிப்புணர்வு பேரணி
Edappadi King 24x7 |25 Aug 2024 8:54 AM GMT
எடப்பாடியில் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் தமிழ்நாடு கியோகுஷின் சின்னு,ஸ் கராத்தே சங்கம், ரோட்டரி சங்கம், அப்துல் கலாம் சாதனைப் பறவைகள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து ஆரோக்கியமான வாழ்வு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். எடப்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி நைனாம்பட்டி, அம்மன் நகர், வெள்ளாண்டிவலசு வழியாக கேட்டுக்கடை பகுதியில் முடிவுற்றது. இப்பேரணியில் ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல், நடைபயிற்சி மேற்கொள்ளுதல், புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு, ரத்த அழுத்தம் குறைய தியானம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ மாணவிகள் கையில் ஏந்தியபடி பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது தமிழ்நாடு கியோகுஷின் கராத்தே சங்கம், ரோட்டரி சங்கம், அப்துல் கலாம் சாதனை பறவைகள் அறக்கட்டளை நிர்வாகிகள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
Next Story