பக்கத்து வீட்டு பெண் உடை மாற்றுவதை செல்போனில் போட்டோ எடுத்த மற்றொரு பெண்.படத்தை காட்டி தகாத செயலில் ஈடுபட முயன்ற இளைஞர். பாதிக்கப்பட்ட பெண் புகாரில் மூவர் கைது

கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டி கிராமத்தில் உள்ள வடக்குத் தெருவில் தனலட்சுமி ( 30) - ஆனந்தராஜ் (28) தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டருகே குடும்பத்துடன் வசிக்கும் 38 வயது பெண் உறவினர் என்பதால் தம்பதியர் நட்பு ரீதியாகவும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆனந்தராஜ் குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தனலட்சுமி ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற ஆனந்தராஜ், உடன் பக்கத்து வீட்டு பெண்ணையும் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். எனவே விசாரணை முடிந்ததும் ஆனந்தராஜின் சகோதரர் சின்னச்சாமி உடன் இரு சக்கர வாகனத்தில் அப்பெண் ஊருக்கு சென்றுள்ளார். அப்போது தனது அண்ணன் ஆனந்தராஜ்-ன் செல்போனில் அப்பெண் உடை மாற்றும் போது எடுக்கப்பட்ட படத்தை காட்டிய சின்னச்சாமி தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ஆனந்தராஜ்-ன் தூண்டுதலில், உடை மாற்றும் போது தனலட்சுமி போட்டோ எடுத்ததும், அதைக் காட்டி சின்னச்சாமி தகாத முறையில் ஈடுபட முயன்றதது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பெரியகுளம் மகளிர் காவல்துறையினர் தனலட்சுமி, ஆனந்தராஜ் மற்றும் சின்னச்சாமி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story