ஆரணி, சேவூரில் விஜயகாந்த் பிறந்த நாள் முன்னிட்டு அன்னதானம்.
ஆரணி. தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி பழையபஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் அவரது உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். இதில் நகர செயலாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர் வழக்கறிஞர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். மேலும் இதில் வழக்கறிஞரணி மாவட்ட செயலாளர் திருஞானம், மாவட்ட பொருளாளர் ஜான்பாஷா, இளைஞரணி துணைசெயலாளர் இளவரசன், நகர நிர்வாகிகள் பிச்சாண்டி, முனியாண்டி, சரவணன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சேவூர். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி அடுத்த சேவூர் பஸ் நிறுத்தம், எம்ஜிஆர் சிலை அருகில் விஜயகாந்த் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தேமுதிக மாவட்டதுணைசெயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். மேலும் இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் கருணாகரன், ஒன்றியஅவைத்தலைவர் சிவசண்முகம், நெசவாளர் அணி மாவட்டசெயலாளர் பாக்கியராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பார்த்தீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story



