குந்தாணி பாளையத்தில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

குந்தாணி பாளையத்தில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
குந்தாணி பாளையத்தில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, குந்தாணி பாளையத்தை சேர்ந்தவர் தீனதயாளன் வயது 58. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இவர் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 6 மணி அளவில் அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த தீனதயாளனின் மூத்த சகோதரர் மணிவண்ணன் வயது 60 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த தீனதயாளன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story