மாம்பழக்கார தெருவில் காதல் தோல்வியால் மணமுடைந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.
Karur King 24x7 |25 Aug 2024 12:32 PM GMT
மாம்பழக்கார தெருவில் காதல் தோல்வியால் மணமுடைந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.
மாம்பழக்கார தெருவில் காதல் தோல்வியால் மணமுடைந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மடக்குடி மாவிலன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 40.இவரது மகன் மகேஷ் வயது 18. இவர் கரூர்-மதுரை சாலையில் உள்ள ஜெயராம் கல்லூரியில் பிகாம் சிஏ முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி, கரூர் மாவட்டம், லாலாபேட்டை, மாம்பழக்கார தெருவில் உள்ள மாதேஷின் மாமா மாரியப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு 10 மணியளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை நெடுநேரம் ஆகியும் அவர் தங்கியிருந்து அறையின் கதவு திறக்கப்படாததால், திறந்து பார்த்தபோது மாதேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாதேஷின் தந்தை மணிகண்டனுக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்,இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, மாதேஷ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், உயிரிழந்த மாதேஷின் உடலை குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லாலாபேட்டை காவல்துறையினர்.
Next Story