திருப்பத்தூரில் புதிய பயணியர் நிழற்குடை!மது பிரியர்களின் கூடாரமாக மாறிய அவலம்!

திருப்பத்தூரில்  புதிய பயணியர் நிழற்குடை!மது பிரியர்களின் கூடாரமாக மாறிய அவலம்!
திருப்பத்தூரில் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடை!மது பிரியர்களின் கூடாரமாக மாறிய அவலம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடை!மது பிரியர்களின் கூடாரமாக மாறிய அவலம்! திறப்பு விழா செய்தும் பயன்பாட்டிற்கு வராத பேருந்து நிழற்குடை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு தினசரி காய்கறி மார்க்கெட் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்குகாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15லட்சம் மதிப்பிட்டில் பேருந்து நிழற்குடைத்தை கட்டி கடந்த மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் ஆ.நல்லதம்பி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து அந்த புதிய நிழற்குடையில் பேருந்துகள் அங்கு நின்று செல்வதில்லை மேலும் பேருந்துகள் அனைத்தும் தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் உள்ள இடத்தில் நின்று செல்கின்றனர். அங்கு காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்வேறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் இருந்து வருகிறது. புதியதாக கட்டிய நிழற்குடத்தில் மது பிரியர்கள் அங்கேயே அமர்ந்து மது அருந்தி விட்டு பாட்டிலை அங்கே தூக்கி வீசப்பட்டு செல்கின்றனர். அதனை தொடர்ந்து புதிய பேருந்து நிழற்குடம் அமைத்த இடத்தில் பேருந்துகள் நின்று செல்ல வழிவகை செய்திருந்தால் நிழற்குடத்தில் மது பிரியர்கள் மது அருந்த மாட்டார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழகமும் புதிய பேருந்து நிழற்குடைத்திற்கு பேருந்து நின்று செல்ல நடவடிக்கை எடுப்பார்களா என பெருத்திருந்து பார்ப்போம்...
Next Story