ராமநாதபுரம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேர்வு

ராமநாதபுரம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேர்வு
பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி எஸ்.எம்.சி தலைவராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தேர்வு.
:ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி எஸ்.எம்.சி தலைவராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவரும்,பெரியபட்டினம் ஊராட்சி தலைவரின் மகனுமான ரியாஸ்கான் தேர்வு செய்யப்பட்டார்.அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.தலைமையாசிரியர் லதா ரமணி வரவேற்றார். கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள்,முன்னாள் மாணவர்கள்,ஆசிரியர் பயிற்றுநர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் மற்றும் பள்ளியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய எஸ்.எம்.சி தலைவராக எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவரும்,பெரியபட்டினம் ஊராட்சி தலைவரின் மகனுமான ரியாஸ்கான்,துணைத் தலைவராக பாத்திமா மற்றும் முன்னாள் மாணவர்களின் உறுப்பினராக பைரோஸ்கான் ஆகியோர் தலைமையில் 24 உறுப்பினர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை குழு தேர்வு செய்யப்பட்டது.ஏற்பாடுகளை நல்லாசிரியர் முத்துக்குமார் செய்திருந்தார்.முடிவில் ஆசிரியர் ஜெயபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Next Story