காங்கேயம் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு முன்னாள் முதல்வருக்கு நேரில் அழைப்பு
Tiruppur King 24x7 |25 Aug 2024 2:48 PM GMT
காங்கேயம் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு முன்னாள் முதல்வருக்கு நேரில் சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது
காங்கேயம் 9 வார்டு உறுப்பினரும் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் A.P.துரைசாமியின் மகன் D.ஜெயசூர்யா - சவுமித்ரா ஆகியோர் திருமணம் 08.11.2024 அன்று காங்கேயத்தில் என்.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதை தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து திருமண பத்திரிகையை இரு வீட்டார்களும் வழங்கி திருமனாத்திற்கு வந்து தலைமையேற்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். இவர்களுடன் காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கேயம் ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என்.நடராஜ் உடனிருந்தார்.
Next Story