பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நகர பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
Rasipuram King 24x7 |25 Aug 2024 2:53 PM GMT
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நகர பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் 2024 மற்றும் நகர பயிலரங்கம், மற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ள அதிசிந்தா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்பி டாக்டர் கே.பி. இராமலிங்கம் தலைமை வகித்தார். மேலும் இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றி பல்வேறு பணிகள் குறித்து நிர்வாகிகள் இடம் எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில், இராசிபுரம் நகரத்தில் உள்ள மாநில, மாவட்ட மற்றும் நகர,அணி, பிரிவு, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் 100.க்கும் மேற்பட்ட பலரும் கலந்து கொண்டார்கள் ..
Next Story