ஆண்டிப்பட்டி அருகே விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது

அரசியல்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தெப்பம் பட்டியில் தேமுதிகவின் நிறுவனத்தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.தேமுதிகவின் ஆண்டிபட்டி தெற்கு ஒன்றியம் தெப்பம்பட்டி கிளை சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் விஜயகாந்தின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து நடைபெறும் வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .இவ்விழாவில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர் பி ராஜா தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் தெற்கு ஒன்றிய பொருளாளர் முருகவேல் சித்தர்பட்டி கிளை செயலாளர் முருகன் தேமுதிக இளைஞர் அணி பாலமுருகன் , கிளை செயலாளர் பாலகிருஷ்ணன், சேது முருகன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் இந்த நிகழ்வில் பொதுமக்கள் ஏராளமானோர் அன்னதானம் திட்டத்தில் பங்கேற்று பயன்பெற்றனர்
Next Story