ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு ஏரி பூங்காவை ஆய்வு செய்த நெதர்லாந் நிறுவனம்
Tiruvallur King 24x7 |25 Aug 2024 3:45 PM GMT
ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு ஏரி பூங்காவை ஆய்வு செய்த நெதர்லாந்தை சேர்ந்த PosadMaxwan என்னும் (டச்சு நகர்ப்புற வடிவமைப்பு நிறுவனம் ஆவடி நகரில் பல்வேறு மாற்றங்களை விரைவில் மேற்கொள்ள உள்ளனர்
ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு ஏரி பூங்காவை ஆய்வு செய்த நெதர்லாந்தை சேர்ந்த PosadMaxwan என்னும் (டச்சு நகர்ப்புற வடிவமைப்பு நிறுவனம். ஆவடி நகரில் பல்வேறு மாற்றங்களை விரைவில் மேற்கொள்ள உள்ளனர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பகுதிக்குட்பட்ட திறந்தவெளி இடங்களை நெதர்லாந்தைச் சேர்ந்த PosadMaxwan (டச்சு நகர்ப்புற வடிவமைப்பு நிறுவனம் Sponge Collaborative அடிப்படையில் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து அதன் எல்லை பகுதிக்கு உட்பட்ட CMDA வால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த வெளியை நிலங்களை மறுகட்டமைப்பு செய்ய ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திறந்தவெளி பகுதிகளான (ஏரிகள்,பசுமையான சூழல் நிறைந்த இடங்கள், பூங்காக்கள், பள்ளி மைதானங்கள், பொது இடங்கள் மற்றும், ரயில் நிலையங்கள் போன்றவற்றை பகுப்பாய்வு செய்து புரிந்துகொண்டு மறு வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு வழிகாட்டுதல்களை விரைவில் செய்ய உள்ளனர். அந்த வகையில் ஆவடி மாநகராட்சிக்கு ஆணையர் கந்தசாமி IAS அவர்களை சந்தித்த இந்த குழுவினர். விரைவில் புதிய திட்டத்திற்கான தரவைப் பகிர்வதற்கும்,ஆவடி நகரத்தில் உள்ள பல்வேறுதிறந்தவெளி இடங்களை தேர்வு செய்து எதிர்காலத்தில் எப்படி மறுவடிவமைப்பு செய்யலாம் என கூட்டாக ஆய்வு செய்தனர்.ஆவடி நகரத்தில் பல்வேறு இடங்களில் புதிய முயற்சிகளைச் செய்யவும் அந்த இடங்களை பார்வையிட்டு எதை மேம்படுத்தலாம் என்பதை புரிந்து கொள்ள சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட நன்கு பயன்படுத்தப்படும் பருத்திப்பட்டு ஏரியைச் மாநகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் மாநகராட்சி பொறியியல் குழுவினர் மற்றும் டச்சு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு கள ஆய்வு செயதனர்.
Next Story