கடமலைக்குண்டு மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுசிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிப்பு

கடமலைக்குண்டு மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுசிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிப்பு
ஆன்மீகம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை- மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கடமலைக்குண்டு கிராமத்தில் மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்து உள்ளது. இந்த திருக்கோவில் சன்னதியில் அமைந்துள்ள பெருமாளுக்கு நாளை 26: 8: 2024 திங்கட்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெறும் என்றும் உள்ளூர் மற்றும் வெளியூர்பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதே திருவேடமிட்டு வரலாம் என்றும் ,தொடர்ந்து5:30 தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்றும் இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று தரிசனம் செய்யலாம் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story