சங்ககிரி சோமேஸ்வர ஆலய கும்பாபிஷேக விழா நிறைவு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....

சங்ககிரி சோமேஸ்வர ஆலய கும்பாபிஷேக விழா நிறைவு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....
சங்ககிரி:சோமேஸ்வர ஆலய கும்பாபிஷேக விழா நிறைவு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம்....
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவு 44வது நாள் மண்டல பூஜை அருள்மிகு சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோயில்களின் ஸ்ரீ பாதம் தாங்கிகள் குழுவின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் விநாயகர், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி, பெருமாள், சண்டீகேஸ்வரர், துர்க்கை அம்மன், ஆறுமுகவேலன், காலபைரவர், நவகிரகங்கள், ஐயப்பன், சௌந்தரநாயகி அம்மன், சோமேஸ்வரர், சனிபகவான் தனது மனைவி நீலாதேவியுடன் உள்ளார். இக் கோயிலில் 1994ஆம் ஆண்டுக்கு பிறகு 30 ஆண்களுக்கு பின்னர் ஜூலை 12 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனையடுத்து தினசரி மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 44வது நாள் மண்டல பூஜைகள் அருள்மிகு சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோயில்களின் ஸ்ரீ பாதம் தாங்கிகள் குழுவின் சார்பில் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் சங்ககிரி நகர், வி.என்.பாளையம், சுற்றுவட்டார கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச்சென்றனர். பாதம் தாங்கிகள் குழுவின் சார்பில் அனைவரையும் அமர வைத்து வாழை இலையில் உணவுகள் பரிமாறப்பட்டது.
Next Story