ராமநாதபுரம் சொகுசு காரில் ஆடுகள் திருடிய இரண்டு பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய உட்கோட்டங்களில் தொடர்ந்து கார்களில் சென்று ஆடுகளை திருடிவரும் நபர்களைக் கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் IPS அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தினேஷ் தலைமையிலான காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு CCTV கேமராக்களை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில் 25.08.2024-ம் தேதி காரைக்குடி சேர்ந்த 2 திருடர்களை கைது செய்தும், அவர்களிடமிருந்து திருடப்பட்ட 8 வெள்ளாடுகள், ஆடுகள் விற்றதில் கிடைத்த 12 லட்சம் பணம் மற்றும் ஆடுகள் திருடுவதற்காக அவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை கைப்பற்றியும் உள்ளனர். மேற்படி தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட திருடர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
Next Story



