ராமநாதபுரம் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
Ramanathapuram King 24x7 |26 Aug 2024 3:14 AM GMT
தங்கச்சி மடத்தில் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா என உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் உணவு கடைகளையும் மாலை நேர தள்ளுவண்டி உணவுகடைகள், துரித உணவு வகைகள் போன்றவர்களை மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கு.லிங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்த பொழுது உணவு வணிகத்திலிருந்து பெறப்பட்ட ரகசிய தகவலின் பேரில் பாம்பன் பகுதியில் சிந்தா மளிகை ஸ்டோர் எனும் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் விசாரித்த பொழுது நந்தகுமார் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வாங்குவதாக தெரிவித்ததை தொடர்ந்து நந்தகுமார் என்பவரின் கடை மற்றும் வீடு ஆகிய பகுதியில் ஆய்வு செய்த பொழுது 60 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 55 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூபாய் 75,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதில் பாம்பன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், சுகாதார ஆய்வாளர் சீனி மரக்காயர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமி காவலர்கள் முனியசாமி பாண்டியன், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story