ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளருக்கு கோரிக்கை மனு

நகர் பகுதியில் சுற்றி திரி நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கோரிக்கை மனு
ராமநாதபுரம் நகர் 33 வார்டுகளை உள்ளடங்கியது, இதில் நூற்றுக்கு மேற்பட்ட தெருக்களில் மக்கள் வாசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு தெருவிற்கு 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வருகின்றனர் பல நாய்கள் சாலையில் கடந்து செல்பவர்களையும், குழந்தைகளையும், மாணவர்களையும், மாணவிகளையும், விரட்டி,விரட்டி கடிக்க முற்படுகிறது. இவர்கள் பயந்து அங்குஇங்குமாக ஓடி கீழே விழுந்து ரத்த காயங்களோடு பள்ளிகளுக்கும் இதர பணிகளுக்கும் செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டி, விரட்டி கடித்து பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இரவு நேரங்களில் சாலையை கடந்து செல்பவர்களை நாய்கள் கும்பலாக வழியை மறித்து நகர விடாமல் கடிக்கு முற்படுகின்றன, இந்த அவலநிலை தொடர்கிறது, இதனால் பொது மக்கள் பயந்த நிலையிலேயே சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தாங்கள் தலையிட்டு உடனடியாக தெருநாய்களை அப்புறப்படுத்தி நகர மக்களையும், மாணவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்
Next Story