காதலி திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் தற்கொலை

காதலி திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் தற்கொலை
திருச்செந்தூர் அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரப்பட்டினம் அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரி மியான் மகன் சகாப் உசேன் (29), இவர் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ள கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் வெல்டராக காண்டாக்ட் அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 1ம் தேதி விடுமுறையில் பீகாருக்கு சென்றவர் 20 ஆம் தேதி கல்லாமொழிக்கு வந்தாராம். வந்ததிலிருந்து சரியாக வேலை செய்யாமல் சோகமாக இருந்தாராம். மேலும் தனது நண்பர்களிடம் பீகாரில் தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகும் அவள் திருமண செய்ய மறுத்து விட்டதால் எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது என்று கூறினாராம். இந்நிலையில் நேற்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story