பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது

சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலர் கலந்து கொண்டனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூர் நான்கு ரோடு செல்லும் வழியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் வெங்கட்ராகவன் தலைமையில், மாநில பொது செயலாளர் சங்கர் மாநில துணைத் தலைவர் மணிவேல் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரத துணை அமைப்பு செயலாளர் கணேஷ் மிஸ்ரா, தென் பாரத துணை அமைப்பு செயலாளர் ராஜீவன், தமிழ் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் வருகின்ற 2026 பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத மாநாடு நடத்துவது குறித்தும் ஆலோசித்து பல முக்கிய முடிவுகள் எடுப்பது என்றும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு மத்திய அரசின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தினை வரவேற்று அதற்கு மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநில அரசுகளும் இந்த ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பாரதிய மஸ்தூர் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story