சிவகங்கையில் மாடு, குதிரை வண்டி எல்கை பந்தயங்கள்
Sivagangai King 24x7 |26 Aug 2024 4:29 AM GMT
சிவகங்கை அருகே அழகு மெய்ஞானபுரத்தில் மூன்றாமாண்டு கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி, குதிரை வண்டிப் பந்தயங்கள் நடைபெற்றன.
சிவகங்கை -தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட இந்தப் பந்தயத்தில் பெரியமாடு, சிறியமாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும், பூஞ்சிட்டு மாடு பிரிவுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன. பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 16 ஜோடிகள், பூஞ்சிட்டுப் பிரிவில் 16 ஜோடிகள் என மொத்தம் 42 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 42 ஜோடி மாடுகள் பங்கு பெற்றன. முதல் 5 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டிகளை சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.
Next Story