விவசாயம் செழிக்க வேண்டி கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம்
Thoothukudi King 24x7 |26 Aug 2024 4:58 AM GMT
விவசாயம் செழிக்க வேண்டி நாகலாபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மக்கள் நலமுடன் வாழ வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. குருபூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. வேள்வியை திருவிக நகர் சக்திபீட தலைவர் சக்திமுருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். தூய்மை பணியாளர்களுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது. மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் மனித நேயத்துடன் வாழவும், தொழில் வளம் பெருகவும் செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கஞ்சி கலயம், தீச்சட்டி எடுத்து ஆன்மிக ஊர்வலமாக வந்தனர். ஆன்மிக ஊர்வலத்தை வேள்விக்குழு பொறுப்பாளர் கிருஷ்ணநீலா தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வழியாக மன்றத்தை வந்தடைந்தது. அங்கு அன்னைக்கு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மன்ற தலைவர் விஜயலெட்சுமி துவக்கி வைத்தார். விழாவில், திருவிக நகர் சக்திபீட மகளிர் அணி பத்மா, முத்துலெட்சுமி, துணைத்தலைவர் மாரியம்மாள், மன்ற பொறுப்பாளர்கள் ராஜதுரை, சுப்புலெட்சுமி, கற்பகம், சோலையம்மாள், சக்திவேலம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story