அறிவொளி நகரில் தேங்கி கிடக்கும் கழிவுகள்.

கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்.
பல்லடம் அறிவொளி நகர் . தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்.அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களின் நடுப்பகுதியில்.இந்த பொதுவான வழி தடங்களில் மிகுந்த சுகாதார சீர்கேடு ஏற்பட்டு .இங்கு வாழும் பொதுமக்களுக்கும் . சிறிய குழந்தைகளுக்கும் அபாயகரமான டெங்கு காய்ச்சல் போன்ற நோய் நொடிகள் ஏற்படக்கூடிய நிலை கடந்த மூன்று வார காலங்களாக தொடர்ந்து நீடிக்கின்றன . இங்கு கழிவறை கழிவுகள் நிறைந்து வரும் நிலையில் கழிவறை ஜங்ஷன் தொட்டிகள் நிறைந்து உள்ளன . அந்த தொட்டிகளை கூட மூடப்படாமல் கல்களை வைத்து அந்த கழிவு தொட்டிகளை திறந்த நிலையில் சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாக காணப்படுகின்றது . இதற்குப் பலமுறை சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு அலைபேசி மூலமாக தெரிவிக்க ப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் பல்லடம் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் . இப்பகுதியில் எந்தப் ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த துர்நாற்றத்தோடு டெங்கு காய்ச்சல் . காலரா போன்ற . நோய் பரவி . இங்கு வாழ்கின்ற மக்களும் . குழந்தைகளும் இறப்பை நாடி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருகின்றது . தயவுசெய்து . திருப்பூர் மாவட்ட அரசு நிர்வாகம் இந்த கோரிக்கையை ஏற்று .அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்குள் . ஏற்பட்டு இருக்கின்ற சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சரி செய்து கொடுக்குமா ? இல்லை பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் . மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்து . மறியல் செய்தால் தான் இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கப்பெறுமா . ? . எனவே . திருப்பூர் மாவட்ட ஆட்சி நிர்வாகம் . பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story