வெள்ளக்கோவிலில் தேமுதிக கட்சி சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
Tiruppur King 24x7 |26 Aug 2024 6:33 AM GMT
வெள்ளகோவில் நகர ஒன்றிய தேமுதிக கட்சி சார்பில் விஜயகாந்தின் 72 வது பிறந்த நாள் விழா
வெள்ளகோவில் நகர ஒன்றிய கழகத்தின் சார்பில் தேமுதிக கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சீரும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் மணி கழக கொடி ஏற்றினார்.பின்னர் வெள்ளகோவில் பழைய பேருந்து நிலையத்தில் கேப்டன் ரசிகரும் முன்னாள் நகர கழகச் செயலாளருமான வழக்கறிஞர் கந்த சரவணகுமார் கழக கொடியேற்றினார். பின்னர் காமராஜபுரத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் கொடியேற்றினார். தீத்தம்பாளையம், பழைய பேருந்து நிலையம், காமராஜபுரம் ஆகிய இடங்களில் ஏழை எளிய மக்களுக்கு மாவட்ட துணைச் செயலாளர் உதயகுமார், நகரக் கழக செயலாளர் மீன் ரவி தலைமையில் இனிப்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கேப்டனின் தொண்டர்கள், ரசிகர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story