திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனைக்கு எடுத்து வந்த வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!

திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனைக்கு எடுத்து வந்த வட மாநிலத்தவர் உட்பட இருவரை நல்லூர் காவல் நிலைய போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் எடுத்து வந்த வடமாநிலத்தவர் உட்பட இருவர் கைது!!! தமிழக முழுவதும் போதை பொருள் விற்பனை குறித்து காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர். லட்சுமி அவர்களின் உத்தரவின்படி காவல் துறையினர் வாகனத்தணிக்கை மற்றும் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருக்கக்கூடிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பள்ளக்காட்டுப்புதூர் பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் பதிக்க வைப்பதாக பட்டிருப்பதாக தகவல் வந்ததை எடுத்து தனிப்படை காவல்துறையினர் பள்ளக்காட்டு புதூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது ஒரு வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் 13 செய்தனர் மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சேட்டு சிங் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 42 கிலோ ஹான்ஸ் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
Next Story