திருப்பூரில் த வெ க கொடி ஏற்றிய சிறிது நேரத்தில் காவல் துறை அனுமதி பெறப்படவில்லை என தாங்களாகவே கொடிகம்பங்களை அகற்றிய விஜய் ரசிகர்கள்!

திருப்பூரில் த வெ க கொடி ஏற்றிய சிறிது நேரத்தில் காவல் துறை அனுமதி பெறவில்லை என தாங்களாகவே விஜய் ரசிகர்கள் கொடிகம்பங்களை அகற்றினர்.
திருப்பூர்: தவெக கொடி ஏற்றிய சிறிது நேரத்தில் காவல் துறை அனுமதி பெறப்படவில்லை என தாங்களாகவே  கொடிக்கம்பங்களை அகற்றிய விஜய் ரசிகர்கள். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு  பகுதிகளில் இன்று  தமிழக வெற்றி கழகத்தின் கொடியை  ரசிகர்கள் ஏற்றி கொண்டாடி வந்தனர். இந்நிலையில் சூசையாபுரம், கல்லம்பாளையம், மாஸ்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்க மாநகராட்சி இடம் அனுமதி பெற்ற தமிழக வெற்றி கழகத்தினர் போலீசாரிடம் அனுமதி பெறவில்லை என்பதால் கொடி கம்பத்தை அகற்ற அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கொடிக்கம்பங்களை ரசிகர்கள் தாங்களாகவே அகற்றி சென்றனர் அனுமதி பெற்று மீண்டும் கொடிக்கம்பம் அமைத்துக் கொள்வதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கொடியேற்றப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story