நாகர்கோவிலில் மாநில உடல் வலுப் போட்டி அமைச்சர் பரிசு வழங்கினார் 

நாகர்கோவிலில் மாநில உடல் வலுப் போட்டி அமைச்சர் பரிசு வழங்கினார் 
மாநில போட்டி
தமிழ்நாடு உடல் வலுசங்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட உடல் வலு சங்கம் சார்பில் 15வது மாநில அளவிலான சீனியர் மற்றும் மாஸ்டர் உடல் வலு போட்டி நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. துவக்க விழாவிற்கு தமிழ்நாடு உடல் வலு சங்க பொதுச்செயலாளர் ஸ்ட்ராங்மேன் கண்ணன் தலைமை வகித்தார்.       போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து போட்டிகள் நடந்தன. பல்வேறு பிரிவுகளாக ஆண்களுக்கும்  பெண்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் உட்பட 200 -க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.        போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பழுதுக்கும் சங்க செயலாளர் சரவண சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இரும்பு மனிதன் பட்டத்தை கன்னியாகுமரியை சேர்ந்த கோகுல் பெற்றார். இரும்பு பொன்மணி பட்டத்தை மதுரை சேர்ந்த நாகராணி பெற்றார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கன்னியாகுமரி மாவட்டம் பெற்றது.
Next Story