சி.பி.எம். மாநாடு நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்பு
Komarapalayam King 24x7 |26 Aug 2024 11:17 AM GMT
குமாரபாளையத்தில் நடந்த சி.பி.எம். மாநாட்டில் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த சி.பி.எம். மாநாட்டில் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குமாரபாளையம் காவேரி நகர் கட்சிக் கிளைகளின் எட்டாவது மாநாடு காந்தியடிகள் தெரு பகுதியில் நடந்தது. இந்த கிளை செயலர் செந்தில் தலைமை வகித்தார். விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார் , கட்சியின் மூத்த நிர்வாகி ராமசாமி கட்சிக்கொடியினை ஏற்றினார் . கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன் துவக்கவுரையாற்றினார். வரவு ,செலவு ,வேலை அறிக்கையை சங்க செயலாளர் மாதேஷ் வரவு ,செலவு, வேலை அறிக்கையை சமர்பித்தார். கட்சியின் காவிரி நகர் ஏ. கிளை செயலாளராக மாதேஸ்வரன், பி. கிளை செயலாளராக பெருமாயி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், நகர செயலாளர் சக்திவேல், நகர குழு உறுப்பினர்கள் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். குமாரபாளையம் காவிரி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவு நீரை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும், .காவிரி நகர் காந்தியடித்தெரு பகுதியில் ,பட்டா இல்லாமல் இருக்கும் வீடுகளுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும், காந்தியடிகள் தெரு பகுதியில் சமுதாயம் கூடம் அமைக்க வேண்டும், உழவர் சந்தை பகுதியில் உள்ள கழிப்பிடங்களை உடனடியாக பராமரிப்பு செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் நிறைவாக ஏராளமானோர் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்று, காவேரி நகர் பாலம் அருகே பொது கூட்டம் நடந்தது. இதில் விசைத்தறி தொழிலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story