மீனவர் தொழில் சங்கம் சார்பில் ஆறாவது மாநில மாநாடு பேரணி
Tiruvallur King 24x7 |26 Aug 2024 11:17 AM GMT
கடல் வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயல்வதாகவும் அதனைக் கண்டித்து அதனை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளதாகவும் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடல் வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயல்வதாகவும் அதனைக் கண்டித்து அதனை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளதாகவும் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக மீனவர்கள் அச்சம் இன்றி மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என சிஐடியு மாநில துணை பொது செயலாளர் குமார் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 6வது மாநில மாநாடு பேரணியுடன் தொடங்கியது இதில் அதானி துறைமுக விரிவாக்கம் செய்யக்கூடாது இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்காக நிலம் வழங்கிய மீனவ குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தியும் ராக்கெட் ஏவும்போது மீன் பிடிக்க தடை செய்யப்படும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும் பழவேற்காடு ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த கோரியும் இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி கன்னியாகுமரி நாகர்கோவில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் பேரணியாக சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில துணை பொது செயலாளர் குமார் மீனவர்கள் நல வாரியம் முறையாக செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அதற்கான அலுவலர்களை நியமிக்க வேண்டும் மத்திய அரசு மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் எனவும் அதானி துறைமுக விரிவாக்கத்தால் மீனவர்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் பாதிப்பு உள்ளதால் அதனை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என்றும் மீன்பிடி தடை காலத்திற்கு தமிழக அரசு 8000 ரூபாய் மட்டுமே மீனவர்களுக்கு நிவாரணமாக வழங்குவதாகவும் அதனை 16 ஆயிரத்து 300 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் இலங்கையில் தமிழகம் என அவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக மீனவர்கள் அச்சம் இன்றி மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்
Next Story