தொடர் மழை காரணமாக இருப்பு வைத்திருந்த வெங்காயங்கள் மழை நீரில் நனைந்து சேதம்
Dharapuram King 24x7 |26 Aug 2024 11:38 AM GMT
தொடர் மழை காரணமாக இருப்பு வைத்திருந்த வெங்காயங்கள் மழை நீரில் நனைந்து சேதம்
தொடர் மழை காரணமாக இருப்பு வைத்திருந்த வெங்காயங்கள் மழை நீரில் நனைந்து சேதம். விலைக்கு வாங்க யாரும் முன் வராததால் விவசாயிகள் வேதனை. தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பகுதியிலுள்ள மணமேடு ரவிசங்கர் என்பவர் தோட்டத்தில் கடந்த 100 நாட்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டது தற்போது அறுவடை செய்யப்பட்டு ஸ்டாக் அதாவது இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் வெங்காயம் நடவு செய்ய ரு 70 ஆயிரம் செலவு செய்யும் விவசாயிகள் தற்போது செய்துள்ள நிலையில் வெங்காயத்தை ஒரு கிலோ 20 ரூபாய்க்கு கூட கேட்பதற்கு ஆள் இல்லாமல் விவசாயம் தோட்டத்தில் (ஸ்டாக்) பட்டறை அமைத்து இருப்பு வைத்துள்ளனர். இது குறித்து விவசாயி ரவிசங்கர் கூறுகையில், வெங்காயம் நடவு செய்யும்போது அதிக விலைக்கு சின்ன வெங்காயத்தை வாங்கி நடவு செய்து வெங்காயத்தை காப்பாற்றுவதற்காக 100 நாட்களுக்கு மேலாக உழைத்து தற்போது அறுவடை நேரத்தில் சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து வருகின்றனர். ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானால் மட்டுமே விலை கட்டுப்படி ஆகும் ஆனால் தற்போது ஒரு கிலோ 20 ரூபாய்க்கு கூட கேட்பதற்கு ஆள் இல்லாமல் சின்ன வெங்காயம் விவசாயிகள் ஸ்டாக் வைத்துள்ளனர். இவ்வாறு ஸ்டாக் வைத்திருந்த போது தற்போ து கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த தொடர் மழை காரணமாக வெங்காயம் அழுக்கும் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது. தற்போது அழுகிய சின்ன வெங்காயங்களை விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
Next Story