பழனி முருக மாநாட்டிற்கு சென்றசோமனூர் பள்ளி பஸ் பிரேக் டவுன் மாற்று அரசு பஸ் ஏற்பாடு

பழனி முருக மாநாட்டிற்கு சென்றசோமனூர் பள்ளி பஸ் பிரேக் டவுன் மாற்று அரசு பஸ் ஏற்பாடு
பழனி முருக மாநாட்டிற்கு சென்றசோமனூர் பள்ளி பஸ் பிரேக் டவுன் மாற்று அரசு பஸ் ஏற்பாடு
பழனி முருக மாநாட்டிற்கு சென்றசோமனூர் பள்ளி பஸ் பிரேக் டவுன் மாற்று அரசு பஸ் ஏற்பாடு பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போதுசோமனூர் தனியார் பள்ளி வாகனம் பழுதுஏற்பட்டது. தாராபுரம் அரசு பஸ் டிப்போ கிளை மேலாளர் மாற்றுமாறு பஸ் ஏற்பாடு செய்து மாணவர்களை பத்திரமாக ஊருக்கு அனுப்பினார்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்து உள்ள  காரணம்பேட்டை அருகே உள்ள சோமனூரில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் வாழை தோட்டத்து அய்யன் கோவில் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 60 பேர் தனியார் பள்ளி பஸ்ஸில் பழனி முருக பக்தர்கள்மாநாட்டிற்கு சென்றனர். முருகன் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் பழனியில் இருந்து காரணம்பேட்டை செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம் அருகே பஸ் திடீரென பிரேக் டவுன் ஆனது .சாமர்த்தியமாக பள்ளி பஸ்டிரைவர்  பஸ் நிலையம் அருகே நிறுத்தினார்.இது குறித்து தாராபுரம் அரசு போக்குவரத்துகழக கிளை மேலாளர் கணேசனுக்கு தகவல்.அளிக்கப்பட்டது.தாராபுரம் கிளை மேலாளர் கணேசன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மாற்று அரசு பஸ் ஏற்பாடு செய்து பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக சோமனூருக்கு அனுப்பி வைத்தார்.
Next Story