ராமநாதபுரம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு
Ramanathapuram King 24x7 |26 Aug 2024 12:08 PM GMT
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணா மலையை கண்டித்து மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றியம் ஆர் ஜி மருதுபாண்டியர் தலைமையில் உருவ பொம்மை எரிப்பு.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணா மலையை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டபம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டியன் துணை செயலாளர் ஆரிப் ராஜா. வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கருணாகரன், மகளிரணி மாவட்ட செயலாளர் ஜெய்லானி சீனிக் கட்டி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் நாகஜோதி, மண்டபம் ஒன்றிய மகளிரணி செயலாளர் சக்தி, எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா, பட்டணம்காத்தான் ஊராட்சி துணைத்தலைவர் வினோத்குமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் நாட்டுக்கோட்டை ஜெய கார்த்திக், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகிகள் ராஜேந்திரன், ஜெயபால், மண்டபம் ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராம மூர்த்தி, ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் குமார், மாவட்ட விவசாய அணி சண்முகவேல் உள்பட பலர் பங்கேற்றனர். அண்ணாமலை உருவபொம்மையை எரித்த அதிமுகவினரை போலீசார் தடுத்தனர்.
Next Story