மகா சபை கூட்டம் நடைபெற்றது

விசைத்தறி தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சிஐடியு பள்ளிபாளையம் ஒன்றிய19-ஆவது மகாசபை கூட்டம் ஆவரங்காடு சிஐடியு அலுவலகத்தில் சங்க ஒன்றிய தலைவர் ஏ.அசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அன்று  நடைபெற்றது.சங்க ஒன்றிய உதவி தலைவர் தோழர் எம்.அங்கமுத்து சிஐடியு கொடியை ஏற்றி வைத்தார்.சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார் வேலை அறிக்கை சமர்பித்தார் . சங்க ஒன்றிய பொருளாளர் பி.முருகேசன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.  இந்த மகாசபை கூட்டத்தில்  பள்ளிபாளையத்தில்  விசைத்தறி நிர்வாகங்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் 1.6.2024 முதல் வழங்க வேண்டிய 3% சதம் கூலி உயர்வை அனைத்து பகுதி தொழிலாளர்களுக்கும் முழுமையாக அமல்படுத்திட வேண்டும்.  மைக்ரோ பைனான்ஸ் கந்துவட்டி கும்பலுக்கு எதிராக கந்துவட்டி சட்டத்தை முழுமையாக தமிழக அரசு அமல்படுத்த  வேண்டும். மைக்ரோ பைனான்ஸ் கந்து வட்டி கும்பலால் துன்புறுத்தல் உள்ளாகி தற்கொலை செய்து கொண்டஓடப்பள்ளியை பகுதியை சேர்ந்த சுஜாதா அவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும். வீடில்லாத விசைத்தறி தொழிலாளர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு குடியிருப்பு வழங்க வேண்டும் 5.பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில்சக்கரை நோய், பிரஷருக்கான மாத்திரைகளுக்கு பொதுமக்களை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் . பள்ளிபாளையம் நகரம் முழுவதும் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட உடைக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்திட வேண்டும் .  பள்ளிபாளையம் ஒன்றியம் முழுவதும் சட்ட விரோத மதுபான விற்பதையும், கஞ்சா விற்பதையும், ஒரு நம்பர், கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பதையும் தடுத்திட வேண்டும்.உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது  மகாசபையில் புதிய நிர்வாகிகளாக ஒன்றிய தலைவராக ஏ.அசன், .  ஒன்றிய செயலாளராக எஸ்.முத்துக்குமார்,பொருளாளராக B.முருகேசன் என  22 புதிய ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யபட்டனர். சங்க மாவட்ட தலைவர் தோழர் : கே மோகன் மகாசபை கூட்டத்தை வாழ்த்தி பேசினார். பொருளாளர் B.முருகேசன் நன்றி கூறினார். விசைத்தறி தொழிலாளர்கள் திரளாக இந்த கூட்டத்தில் பங்கேற்றனர் ..
Next Story