கிருத்திகையை முன்னிட்டு கொளஞ்சியப்பர் கோவிலில் வழிபாடு
Virudhachalam King 24x7 |26 Aug 2024 1:11 PM GMT
பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்
விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை, மற்றும் பங்குனி உத்திரம், வசந்த உற்சவம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். மேலும் இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டி வழிபட்டால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களும் அதிகளவு வந்து செல்வார்கள். இந்நிலையில் கிருத்திகையை முன்னிட்டு சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். அப்போது சிவாச்சாரியார்கள் மகாதீபாராதனை காட்ட பக்தர்கள் அரோகரா கோஷங்கள் எழுப்பி நெய் தீபமேற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் விருத்தாசலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோவில்களிலும் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் சிறப்பு பூஜைகளும் நடந்தது.
Next Story