ராசிபுரம் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜை..
Rasipuram King 24x7 |26 Aug 2024 1:30 PM GMT
ராசிபுரம் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆத்தூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், நெய், வெண்ணெய், மற்றும் மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணருக்கு தங்க காப்பு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் ,சுதர்சன ஹோமம், ஆகியவை நடைபெற்று ராதை கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவம், மகாலட்சுமி சுவாமிக்கு தங்கக்காப்பு அலங்காரம் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story