எட்டாம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
Bodinayakanur King 24x7 |26 Aug 2024 1:34 PM GMT
உப்புகோட்டை டொம்புச் சேரி அருகே 8ம் நூற்றாண்டு சேர்ந்த வரகுண பாண்டியன் மன்னன் காலத்து வட்டெழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு
போடிநாயக்கனூர் உப்புக்கோட்டை டொம்புச்சேரி அருகே காணப்படும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரகுண பாண்டியன் மன்னன் காலத்து வட்டெழுத்து கல்வெட்டு பெருமாள் கோவிலுக்கு 25 சாவா மூவா பேராடுகள் சிவன் கோவிலுக்கு நூறு சாவா மூவா பேராடுகள் ஆடுகளை வளர்த்து அதில் கிடைக்கும் பால் மூலம் நெய் தயாரித்து கோயில்களுக்கு நித்திய விளக்கேற்ற தானமாக ஆடுகள் வழங்கப்பட்டதற்க்கான ஆதாரமாக விளங்கும் கிபி எட்டாவது நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுச் சான்று. தேனி மாவட்டத்தை அழ நாடு என்றும் சின்னமனூரை ஹரிகேசநல்லூர் என்றும் உப்புக்கோட்டை டொம்புச்சேரி கிராமப் பகுதியை திருவிடிபுத்தூர் என்றும் பாண்டியர் காலத்தில் அழைக்கப்பட்டதற்கான முதல் வரலாற்று ஆதாரம் வயல்வெளிக்குள் கேட்பாராற்று கிடக்கும் அவல நிலை. முறையாக ஆய்வு செய்து பாதுகாத்து வந்தால் தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆய்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும்உரிய நடவடிக்கை எடுக்க வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை* . தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 8 km தொலைவில் அமைந்துள்ளது உப்புக்கோட்டை டொம்புச்சேரி. இப்பகுதியில் உள்ள தும்பச்சி அம்மன் கண்மாய் அருகே உள்ள வயல்வெளியில் இரண்டு பக்கமும் விசித்திர எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு நீண்ட காலமாக கேட்பாரற்று பாதுகாப்பற்ற முறையில் கிடப்பதாக இப்பகுதி விவசாயிகள் மற்றும் ஆடு மேய்ப்பவர்கள் தகவல் கூறியதை தொடர்ந்து வரலாற்று ஆர்வலர் அந்தக் கல்லை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் தோட்டத்தில் கேட்பாரற்று கிடந்த கல் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் 8 வது 9வது நூற்றாண்டு சேர்ந்த வரகுண பாண்டிய மன்னன் காலத்து கல்வெட்டு என்றும் தெரியவந்தது. இந்தக் கல்வெட்டில் வட்டெழுத்துக்களால் விவரங்கள் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரகுண பாண்டிய மன்னன் பெயரைக் குறித்த முதல் வட்டெழுத்துக்கள் இதுவாக இருக்கலாம் என்றும் இந்தக் கல்வெட்டின் மூலம் தேனி மாவட்டம் அழ நாடு என்றும் உப்புக்கோட்டை டொம்புச்சேரி கிராமப் பகுதிகள் திருவிடிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கிராமப் பகுதியில் முன்பு சிவன் கோயில் ஒன்றும் பெருமாள் கோயில் ஒன்றும் இருந்ததாகவும் சிவன் கோவிலுக்கு 100 சாவா மூவா பேராடுகள் ரவி இயக்கம் என்பவன் மூலம் தானமாக வழங்கப்பட்டு ஆடுகள் என்றும் நூறுக்கு குறையாமல் பராமரிக்கப்பட்டு ஆடுகள் மூலம் பெறப்படும் பாலில் இருந்து கிடைக்கும் நெய்மூலம் கோவிலில் நாள்தோறும் விளக்கு ஏற்றி வர வேண்டும் என்றும் அதேபோல பெருமாள் கோவிலுக்கு 25 சாவா மூவா பேராடுகள் அடி பொடி புலவன் என்பவருக்கு தானமாக வழங்கப்பட்டதற்கும் வழங்கப்பட்ட ஆடுகள் மூலம் கிடைக்கப்பெறும் பாலில் இருந்து நெய் தயாரித்து கோவிலுக்கு நித்திய விளக்கு ஏற்று வர வேண்டும் என்றும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளதாக வரலாற்று பேராசிரியர் தெரிவித்தார். சா வா மூவா பேராடுகள் என்றால் மரணம் இல்லாமல் முதுமையும் இல்லாமல் ஆடுகள் கோவிலில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது அதாவது சிவன் கோவிலில் 100 ஆடுகளும் பெருமாள் கோவிலில் 25 ஆடுகள் என்றும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற கல்வெட்டுகள் இப்பொழுது பல்வேறு இடங்களில் நிறைந்துள்ளதாகவும் வரலாற்று தொல்லியல் ஆய்வாளர்கள் முறையாகப் இப்பகுதியில் ஆய்வு செய்தால் நிறைய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும் என்றும் வருங்கால வரலாற்று ஆர்வலர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் வரலாற்று பேராசிரியர் முனைவர் மாணிக்கராஜ் தெரிவித்தார்.
Next Story