திருப்பூரில் நடந்த மாநில அளவிலான டேக்வோன்டோ போட்டி நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகள் அசத்தல்..
Rasipuram King 24x7 |26 Aug 2024 2:30 PM GMT
திருப்பூரில் நடந்த மாநில அளவிலான டேக்வோன்டோ போட்டி நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகள் அசத்தல்..
திருப்பூர் சசூரி சிபிஎஸ்சி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான டேக்வோன்டோ போட்டி நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்ட இராசிபுரம் டேக்வோன்டோ (TAEKWONDO) விளையாட்டு அமைப்பு செயலாளரும், குளோப் டேக்வோன்டோ கிளப்பின் நிறுவனருமான மாஸ்டர் R.வெங்கடேசன் தலைமையில் 13 மாணவ, மாணவிகள் அடங்கிய குழுவானது இப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் 5 வெள்ளி, 2 வெண்கலம் என, மொத்தம் 7 தங்கப் பதக்கங்களை வென்றனர். வென்று வந்த பதக்கங்களை இறகுப்பந்து நண்பர்கள் குழுவினர் முன்னிலையில், ராசிபுரம் கிங்ஸ் அரிமா சங்க நிர்வாகிகள் தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. ராசிபுரம் அண்ணா சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் டேக்வோன்டோ பயிற்சி மாஸ்டர் ஆர். வெங்கடேசன் தலைமையில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story