மோகனூர் ஜியா அபாகஸ் அகாடமி ஆண்டு விழா!
Namakkal King 24x7 |26 Aug 2024 2:58 PM GMT
நிலை தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பரிசு, மற்றும் சான்றிதழ் வழங்கியும், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் ஒலிம்பியாட் போட்டித் தேர்வில் கலந்து கொண்ட 40 மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கடந்த மே 2023ஆம் ஆண்டு முதல் செயல்படும் தலைசிறந்த நிறுவனமான இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் கிளையாக ஜியா அபாகஸ் அகாடமி ஒரு வருடத்திற்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட 5 முதல் 13 வயதுள்ள மாணவர்களை கணிதத்தில் சிறந்து விளங்க அபாகஸ் பயிற்சி சிறப்பான முறையில் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த அகாடமியில் ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாக நிலை தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கேடயம், பரிசு, மற்றும் சான்றிதழ் வழங்கியும், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் ஒலிம்பியாட் போட்டித் தேர்வில் கலந்து கொண்ட 40 மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசு வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மேலும் ஊக்கமளித்து பல சாதனைகளை புரிய ஜியா அபாகஸ் அகாடமி நிறுவனர் பூபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மோகனூர் வணிகர் சங்க தலைவர் நடராஜன், கந்தசாமிக் கண்டர் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் இயக்குநர் சங்கர், அரசு அதிகாரி எழில் வேந்தன் மற்றும் ஜியா அபாகஸ் அகாடமியின் நிறுவனர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story