தனியார் நிறுவனத்தில் இரும்பு கிரேன் விழுந்து கூலி தொழிலாளி பலி

பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரும்பு கிரேன் விழுந்து கூலி தொழிலாளி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரும்பு கிரேன் விழுந்து கூலி தொழிலாளி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளங்கோ என்பவர் வில்லேஜ் செல்ப் கவர்னன்ஸ் கிராம வளர்ச்சிக்காண ஆராய்ச்சி நிறுவனம் வைத்துள்ளார் . அந்நிறுவனத்தில் விவசாய பயன்பாடுக்காண கருவிகள் மற்றும் கிராமத்தில் புதிதாக செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். அந்நிறுவனத்தில் உள்ள பழைய பொருட்களை இரும்பு கடைக்கு போடுவதற்காக இரும்பு கடைக்காரர்களை இன்று வர வைத்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவர் இரும்பு பொருட்களை சேகரிப்பதற்காக அவர்களுடன் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முரளி 47 என்பவரை துணைக்கு அழைத்து சென்றுள்ளார். வாகனத்தில் இரும்பு பொருட்கள் ஏற்றுவதற்காக உள்ளே செல்கின்ற போது மினி வாகனம் கிரைன் மீது மோதியதில் அது கீழே சரிந்து எதிர்பாராத விதமாக கூலி தொழிலாளி முரளி மீது விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வெள்ளவேடு போலீசார் அவர் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story