பரவலூரில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு உரியடி திருவிழா

X
கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மாலையில் உறியடி உற்சவம் நடந்தது. இதில் கிருஷ்ணன் வேடமிட்டவர்கள் வழுக்கு மரம் ஏரி உரியடித்த போது, கூடியிருந்த பக்தர்கள் நான்கு புறமும் இருந்து தண்ணீரை ஊற்ற பானையை பிடித்து பானையில் இருந்த நெய்,மோர், வெண்ணெய், வடை ஆகியவற்றை உண்ணும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story

