மங்கலம்பேட்டை அருகே தீ விபத்தில் கூரை வீடு சேதம்
Virudhachalam King 24x7 |26 Aug 2024 3:36 PM GMT
அத்தியாவசிய பொருட்கள் முக்கிய ஆவணங்கள் தீக்கிரையானது
மங்கலம்பேட்டை அருகே உள்ள கன்னியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் தாஸ் மனைவி கன்னி மேரி. இவரது வீடு இன்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான மங்கலம்பேட்டை தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் தீ மள மளவென பரவி வீடு முழுவதும் பரவி தீக்கிரையானது. இதில் கன்னி மேரி வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள், முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீயில் எறிந்து சேதம் ஆனது. இந்த தீ விபத்து குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story